சூர்யா தயாரிப்பில் கார்த்தி

‘பசங்க’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே தேசிய விருதுகளைக் குவித்தவர். அதன் பிறகு ‘வம்சம்’, ‘மெரீனா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க 2’, ‘கதகளி’, ‘இது நம்ம ஆளு’ படங்களை இயக்கி இருக்கிறார். இதில் ‘பசங்க 2’ படத்தைத் தயாரித்தது சூர்யாவின் ‘2டி’ நிறுவனம். இதில் சூர்யா, அமலாபால் நடித்திருந்தனர். தொடர்ந்து ‘2டி’ நிறுவனத்துக்குப் படம் இயக்குகிறார் பாண்டிராஜ். இதில் கதாநாயகனாக கார்த்திக் நடிக்கிறார். அண்ணன் சூர்யா தயாரிப்பில் தம்பி கார்த்தி நடிப்பது இதுவே முதல் முறை.

பெரிய வரவு செலவுத் திட்டத்தில் தயாராகும் இந்தப் படம் நகைச்சுவைக் கலந்த சண்டைப் படம். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியை முடித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். தற்போது அவர் தயாரித்துள்ள ‘செம படம்’ விரைவில் வெளிவர இருக்கிறது. ஜூலை முதல் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பாண்டிராஜ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது. 

15 Oct 2019

‘எனக்கு சவாலான படமாக இருந்தது’