இறுதிப் போட்டிக்குள் இந்தியாவின் ஸ்ரீகாந்த்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பொது விருது சூப்பர் சீரிஸ் பூப்பந்துப் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் சீன வீரரைத் அவர் தோற் கடித்தார். சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவின் ‌ஷீ யுகியுடன் ஸ்ரீகாந்த் மோதினார்.

இந்த ஆட்டத்தில் 21-10 21-14 என்ற செட் கணக்கில் சீன வீரரை ஸ்ரீகாந்த் வீழ்த்தி னார். கடந்த வாரம் இந்தோனீசி யாவில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் அவர் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தார். பெண்களுக்கான போட்டி யில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா, பி.வி.சிந்து ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சுதிர்மான் கிண்ணப் பூப்பந்துப் போட்டியின் ஆண் களுக்கான இரட்டையர் பிரிவில் சீனாவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி (இடது), சட்விக்சாய் ராஜ் ரன்கிரெட்டி தோல்வி அடைந்தனர். படம்: ஏஎஃப்பி

23 May 2019

சீனாவிடம் தோற்று வெளியேறிய இந்தியா

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

23 May 2019

கோமதியின் தங்கப் பதக்கம் பறிபோகும் அபாயம்