ஐசிசியின் துணைத் தலைவர் இம்ரான் ஹமீது குவாஜா

அனைத்துலக கிரிக்கெட் மன்றத் தின் (ஐசிசி) துணைத் தலைவராக சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் இம்ரான் ஹமீது குவாஜா நியமிக்கப்பட்டு உள்ளார். திரு குவாஜாவைத் துணைத் தலைவராக நியமனம் செய்ய மன்றத்தின் இயக்குநர் சபை நேற்று ஏகமனதாக முடிவெடுத்தது. விதிமுறை மாற்றத்தை அடுத்து, மன்றத்தின் துணைத் தலைவர் பதவி காலியானது. மன்றத்தின் தலைவர் சஷாங் மனோகர் தமது பொறுப்புகளை ஆற்ற முடியாத பட்சத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்கறி ஞரான திரு குவாஜா மன்றத்தை வழிநடத்துவார்.

“துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதைக் கௌரவ மாகக் கருதுகிறேன். மன்றத்தை வெளிப்படையான அமைப்பாக, தகுதிக்குத் தக்க சன்மானம் வழங்கும் அமைப்பாக, அனை வரையும் உள்ளடக்கிய அமைப் பாக மாற்றி அமைத்துள்ள குழு வில் இடம்பெறுவதில் பெருமை அடைகிறேன். கிரிக்கெட் விளை யாட்டு ஒரு பிரகாசமான அத்தி யாயத்துக்குள் நுழைகிறது என்பதில் சந்தேகம் இல்லை,” என்று திரு குவாஜா செய்தியாளர் களிடம் கூறினார்.

திரு இம்ரான் ஹமீது குவாஜா. படம்: சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி