‘ஏமாற்றுபவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது’

நல்லவர்களாக இருப்பவர்களை மதிப்பேன். என்னிடம் நாடகம் ஆடி ஏமாற்றுபவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது என்கிறார் திரிஷா. திரிஷா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், “15 ஆண்டுகளாக எனக்கு நல்ல கதைகள் அமைந்தன. திறமையான இயக்குநர்களும் கிடைத் தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து திரையுலகில் நிலையான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. எல்லாவற் றுக்கும் மேலாக ரசிகர்களும் என் படங்களுக்கு ஆதரவு அளித்தார் கள். “நான் எப்போதும் கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக் கிறதா? என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான். படம் தோல்வி அடைந்தால் தோல்விக் கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.

“சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னைப் பெருமைப்படுத்திய விஷயங்கள். “கௌரவமானவர்களையும் கண்ணியமானவர் களையும் எனக்கு மிகவும் பிடிக் கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும் தேவையானபோது கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி வீசுபவர் களையும் கண்டால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது,” என்று மனம் திறந்து பேசினார் திரிஷா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’