2 ஆண்டிற்கு விலகும் ஜெயம் ரவி

“வரலாற்று சிறப்புமிக்க படங்களில் நடிக்க பொறுமை கட்டாயம் இருக்கவேண்டும். நம்முடைய கதாபாத்திரமும் வேடமும் முக்கியம். ‘சங்க மித்ரா’ ‘பாகுபலி’யை விட வித்தியாசமான படமாக இருக்கும். அதனால் நான் பொறுமையாக இருந்து இந்தப் படத்தில் நடித்து படத்தை வரலாற்று சிறப்பு மிக்க படமாக்க விரும்புகிறேன்,” என்று கூறினார் ஜெயம் ரவி.

‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களில் நடிக்க பிரபாஸ் 5 ஆண்டுகள் ‘கால்‌ஷீட்’ கொடுத்திருந்தார். அந்த 5 ஆண்டுகளும் அவர் வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. இதற்கிடையில் இந்தப் படத்தில் ராணியாக நடிக்க சுருதிஹாசன் ஒப்பந்தம் ஆகி இருந்தார். அவரை ராணியாக வேடமிட்டு சில புகைப் படங்களும் எடுத்தபிறகு சுருதி, “கதையின் முழு விவரத்தையும் எனக்குத் தெரிவிக்கவில்லை.

மேலும் ‘கால்‌ஷீட்’ தேதியை அவர்கள் முடிவு செய்யவில்லை. அதனால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. படத்தி லிருந்து விலகுகிறேன்,” என்று அறிவித்திருந்தார். தற்பொழுது ‘சங்கமித்ரா’ படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹேமா ருக்மணி அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். “சுருதி அவராக இந்தப் படத்திலிருந்து விலகவில்லை. சில காரணங்களால் எங்களால் அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அதனால் நாங்கள்தான் அவரை நீக்கினோம்,” என்று கூறியிருக்கிறார்.

அவருக்குப் பதிலாக ராணியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத் தலைவர் ஹேமா ரும்மணி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

17 Oct 2019

பின்னணிக் குரல் கொடுத்த சாக்‌ஷி

‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார் சுனைனா.

17 Oct 2019

சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். படம்: ஊடகம்

17 Oct 2019

நிகிஷா: சேலைதான் கவர்ச்சி