குற்றாலத்தில் கொட்டும் வெள்ளம்; அருவியில் குளிக்கத் தடை

தென்காசி: கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் கனமழை நீடித்து வரும் நிலையில், குற்றால அருவிகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. முக்கிய அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. முக்கிய அருவி, ஐந்தருவிகளை நெருங்க முடியாத அளவுக்கு வெள்ளம் கொட்டித் தீர்க்கிறது. புலியருவியில் தண்ணீருடன் மண்ணும் கலந்து வெள்ளமாகக் கொட்டியதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக் கப்பட்டது. இதனால் ஏராளமா னோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

குற்றாலத்தில் நான்கு நாட் களாக மழை பெய்வதால் அருவி களில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மேலும் பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் தலா 2 அடி வரை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றாலத்தில் முக்கிய அருவியை நெருங்கவிடாமல் கொட்டும் வெள்ளம். படம்: தமிழக தகவல் சாதனம்