சுடச் சுடச் செய்திகள்

பாலில் கலப்படம்: உறுதி செய்தது தமிழக அரசு

சென்னை: தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளதாகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த உறுதியான அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையை யும் ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகப் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். நூற்றுக்கும் மேற்பட்ட பால் மாதிரி கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர், பால் பொருட்களில் சில தனியார் நிறு வனங்கள் கலப்படம் செய்திருப்பது உறுதியாகி இருப்பதாகத் தெரிவித் தார். சில பிரபல நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், அந்நிறுவனங்களின் பால் பொருட் களில் கலப்படம் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ள தாகக் குறிப்பிட்டார்.

கலப்படப் பால் விவகாரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது முதல் வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். “தனியார் நிறுவனங்களின் பாலில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்படுகின்றன. கலப்படப் பாலை உட்கொண்டால் சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளியானால் மேலும் சில நிறுவனங்கள் சிக்கும்,” என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

இதற்கிடையே பாலில் கலப்படம் செய்யப்பட்டதை அமைச்சர் ராஜேந் திர பாலாஜி நிரூபிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில் அமைச் சர் பதவி விலகவேண்டும் என் றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அமைச்சர் கூறி உள்ள குற்றச்சாட்டுகளை தமிழக பால் முகவர்கள் சங்கம் திட்டவட் டமாக மறுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்ப மும் அச்சமும் நிலவி வருகிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. படம்: ஊடகம்