வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தியவருக்கு அபராதம்

இரவுச் சந்தைகளுக்கு உரிய வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளிநாட்டினர் 19 பேரை வேலைக்கு அமர்த்திய குற்றத்தை சாவ் வெய் லூன் எனும் 40 வயது சிங்கப்பூரர் நேற்று அரசு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கும் செப்டம்பர் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சமூக வருகைச் சீட்டு வைத்திருந்த அந்த வெளிநாட்டினர் கேலாங் செராய், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் உள்ள இரவுச் சந்தைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். சாவ் மீது எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன் அவருக்கு $72,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தண் டனை விதிப்பதில் மற்ற குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. எனினும், அபராதத்திற்குப் பதில் அவர் ஆறு மாதச் சிறைத் தண்டனையை நிறைவேற்றவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.