சுடச் சுடச் செய்திகள்

எளிமையாகும் நிர்வாகப் பணி

அன்றாட நிர்வாகப் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில் 400க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத் தீர்வுத் திட்டத்தைக் கடைப்பிடிக்க இருக் கின்றன. இதன் மூலம் பாலர் பள்ளி ஆசிரியர்களின் உற்பத்தித்திறன் மேம்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ‘ஸ்மாட் சொலுஷன்ஸ்’ திட்டம் மூலம் பாலர் பள்ளி ஆசிரியர்களின் வேலைப் பளு குறையும் என்று பாலர் பருவ மேம்பாட்டு வாரியம் நேற்று கூறியது.

இதன் விளைவாகப் பிள்ளை களைப் பராமரிப்பதிலும் அவர் களுக்குக் கல்வி கற்பிப்பதிலும் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் செலவழிக்கலாம். பராமரிப்பு, கற்பித்தல் ஆகியவற்றின் தரத்தை ஆசிரியர்கள் உயர்த்த புதிய திட்டம் வழி வகுக்கும் என்று வாரியம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாது, ஊழியர் பற்றாக்குறை பிரச்சினையையும் எதிர்கொள்ள பாலர் பள்ளிகளுக்கு இத்திட்டம் உதவும். இதனால் பெற்றோருக்கும் மன நிம்மதி கிடைக்கும் என்று ஆணையம் கூறியது.

நிர்வாகப் பணிகளுக்குத் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் ஸ்மால் வண்டர் பாலர் பள்ளியைப் பார்வையிட அங்கு சென்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் 16 மாதக் குழந்தையான அவன்யா பிரகா‌ஷுக்கு உணவு ஊட்டுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon