கொழுப்பைக் குறைக்காத வீரர்கள் வெளியேற்றப்படுவர்

கொழும்பு: இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றில், “இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைத்துலகத் தரத்துக்கேற்ற திருப்திகரமான உடல் தகுதியுடன் இல்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் அவர் களுக்கு விலக்கு அளிக்கப்படு கிறது. “தேசிய அணியைத் தனிப்பட்ட குழுவினர் தேர்வு செய்தாலும் நாட்டுக்காக விளையாடும் அந்த அணிக்கு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டியது விளையாட்டு அமைச்சர்தான். கிரிக்கெட் வீரர்களின் உடலில் கொழுப்பின் அளவு 16 விழுக்காடுதான் இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அணி வீரர்களில் பலருக்குக் கொழுப்பின் அளவு 26 விழுக்- காட்டுக்கு அதிகமாக உள்ளது.

“மூன்று மாதங்களுக்குள் இலங்கை அணி வீரர்கள் தங்கள் உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும். “உடலில் கொழுப்பு 16 விழுக் காட்டுக்கு அதிகமாக இருக்கும் வீரர்கள் இலங்கை அணியில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இங்கிலாந்தின் மூன்றாவது கோலைப் போடும் ரோஸ் பார்க்லி (நடுவில்). அவர் வலை நோக்கி அனுப்பிய பந்தைத் தடுக்க பல்கேரிய கோல் காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2019

எதிரணியைப் பிழிந்தெடுத்த இங்கிலாந்து

யூரோ 2020க்குத் தகுதி பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும் உக்ரேன் ஆட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி

16 Oct 2019

யூரோ 2020ல் உக்ரேன்