சுடச் சுடச் செய்திகள்

இலங்கை வீரர் மலிங்காவுக்கு ஓராண்டு தடை

கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை மீறி ஊடகத்தில் கருத்துத் தெரிவித்த மலிங்காவுக்கு அனைத்துலகப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அத்துடன் ஒருநாள் அனைத்துலகப் போட்டியில் அவர் வாங்கும் சம்பளத்தில் 50 விழுக்காட்டை அபராதமாகச் செலுத்த வேண் டும். இந்நிலையில் இன்று ஸிம்பாப்வே அணியுடனான அனைத்துலக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் கலந்துகொள்கிறார்.

இருப்பினும் அந்த ஆட்டத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்தில் பாதி அபராதத் தொகையாகப் பிடித்துக்கொள்ளப்படும். முன்னதாக, வெற்றியாளர் கிண்ண அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் போனதால் இலங்கை அணி வீரர்களின் உடல் தகுதியை விமர்சித்து, அவர்களின் கிரிக்கெட் வயது குறித்து கேள்வி எழுப்பினார் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மலிங்கா அமைச்சர் தயாசிறி ஜெய சேகரா கருத்து குறித்து பதிலளிக்கும் போது “கிளியின் கூடு பற்றி குரங் குக்கு என்ன தெரியும்,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon