சுடச் சுடச் செய்திகள்

வத்திகன் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு

வத்திகன்: வத்திகனின் பொருளா ளரும் ஆஸ்திரேலியாவின் கத் தோலிக்க மூத்த பாதிரியாருமான ஜார்ஜ் பெல் மீது ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களுடன் தொடர்பு உடையவை என்று விக்டோரியா மாகாணம் தெரிவித்தது. அவர் மீது பலர் புகார் அளித்து உள்ளனர் என்று அம்மாநில காவல்துறை துணை ஆணையர் ஷேன் பாட்டோன் சொன்னார். இதற்கிடையே தற்போது வத்தி கனில் உள்ள திரு பெல் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு களை மறுத்தார். வத்திகனின் பொருளாளரான அவர் கத்தோலிக்க தேவால யத்தின் மூன்றாவது நிலையில் உள்ள உயர் அதிகாரியாவார். மருத்துவர்களின் அனுமதி கிடைத்த பிறகு விரைவில் ஆஸ் திரேலியாவுக்குத் திரும்பி தம் மீதுள்ள களங்கத்தை திரு பெல் போக்குவார் என்று தேவாலயம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கிக் காத்திருப் பதாகவும் குற்றச்சாட்டுகளை மறுத்து வலுவாகப் போராடப் போவதாகவும் மூத்த பாதிரியார் திரு ஜார்ஜ் பெல் கூறியுள்ளார்.

வத்திகனின் மூத்த பாதிரியார் ஜார்ஜ் பெல். கோப்புப் படம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon