டிரம்ப் பயணத் தடையில் மாற்றம்

வா‌ஷிங்டன்: ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அகதிகளும் அமெ ரிக்காவில் நுழைய விதிக் கப்பட்ட டிரம்ப்பின் பயணத் தடையில் புதிய நிபந்த னைகள் விதிக்கப்பட்டுள் ளன. இதன்படி நெருங்கிய உறவினர்களைப் பார்க்கவும் தொழில் நிமித்தமாகவும் அமெரிக்காவில் நுழைய ஆறு முஸ்லிம் நாட்டவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று டிரம்ப் தலைமையிலான நிர் வாகம் அறிவித்துள்ளது. அதிபர் டிரம்ப்பின் பிரச் சினைக்குரிய ஆறு முஸ் லிம் நாடுகளுக்கு எதிரான பயணத் தடையின் ஒரு பகுதி தொடர்ந்து நீடிக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலை யில் புதிய வழிகாட்டுதல் முறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தகுதியான விசா பெற்று உள்ளவர்களுக்கு புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப் படும். புதிய வழிகாட்டுதல் முறைகள் வியாழன் இரவு முதல் அமலுக்கு வருகின் றன. இதையொட்டி புதிய விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளின் கீழ் பரிசீலிக்கப்படுவர்.

ஏற்கெனவே அமெரிக் காவில் தங்கியுள்ள பெற் றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள், மகன், மகள், மருமகள், மருமகன், உடன்பிறந்த வர்கள் ஆகியோருடன் உள்ள நெருங்கிய உறவை நிரூபிக்கும் பத்திரங்களை ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தாத்தா, பாட்டி, பேரக்குழந்தைகள், அத்தை, மாமா, மைத்துநர், மைத் துனி, சித்தப்பா குழந்தை கள் போன்றோரை நெருங் கிய உறவினர்களாகக் கருத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகியவை அந்த ஆறு முஸ்லிம் நாடுகள்.