ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறைக்கு சீன அதிபர் உறுதி

ஹாங்காங்: சீனாவிடம் ஹாங் காங்கை பிரிட்டன் ஒப்படைத்த 20வது ஆண்டு விழாவில் பங் கேற்பதற்காக நேற்று ஹாங் காங்குக்கு வந்து சேர்ந்த சீன அதிபர் ஸி ஜின்பிங், ஒரே நாடு இரண்டு ஆட்சிமுறை கட்டிக்காக்கப்படும் என்று உறுதியளித்தார். ஹாங்காங் விமான நிலை யத்தில் அதிபர் ஸியையும் அவரது மனைவி திருமதி பெங்கையும் ஹாங்காங் தலைமை நிர்வாகி லியுங் சுன் யிங், அவரது மனைவி ரெஜி னா டோங் சிங் யீ, புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பு ஏற்கும் கேர்ரி லாம் ஆகியோர் வரவேற்றனர்.

சீனா, ஹாங்காங் கொடி களை ஏந்தியிருந்த குழந்தை களும் சீன அதிபரையும் அவ ரது மனைவியையும் வரவேற்ற னர். விமான நிலையத்தில் உரையாற்றிய அதிபர் ஸி, ஹாங்காங் மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். “ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஹாங்காங்குக்கு மீண் டும் வந்துள்ளது மகிழ்ச்சியளிக் கிறது. இரண்டு நாட்களுக்கு சீனாவிடம் ஹாங்காங் திரும்பியதைக் குறிக்கும் 20வது ஆண்டு விழா நடை பெறுகிறது, இது ஒரு மகத்தான விழா, சீனாவுக்கும் ஹாங்காங்குக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வு,” என்று திரு ஸி சொன்னார்.

ஹாங்காங்கில் சீனா, ஹாங்காங் கொடிகளை அசைத்து வரவேற்கும் குழந்தைகளை அதிபர் ஸி ஆர்வத்துடன் பார்க்கிறார். உடன் அவரது மனைவி பெங் லியூவான்(வலம்), ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்கும் கேர்ரி லாம் (வலமிருந்து மூன்றாமவர்). படம்: ராய்ட்டர்ஸ்