முறையான சீருடை அணியாத காவலருக்கு தண்டனை

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் சீருடை அணியாத ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டிபோடும் தண்டனை அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மயூர்பான்ஜி மாவட்டம், பாரிபாடா பகுதியில் நடைபெற்ற ரத யாத்திரையின்போது பாது காப்புப் பணியில் ஈடுபட்ட நான்கு ஊர்க்காவல்படை வீரர்கள் முறை யாக சீருடை அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு பெண் உட்பட அந்த நான்கு காவலர்களுக்கும் முட்டிபோடும் தண்டனை அளித்தார் காவல் ஆய்வாளர். இது தொடர்பான புகைப்படமும் காணொளியும் நேற்று முன்தினம் வெளியானது.

நகரத்தின் முக்கிய பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் இத்தகைய தண்டனை தருவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. தண்டனை அளித்ததாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர் சேத்தி, காவல்துறையினர் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்குத் தண்டனை விதித்ததாகக் கூறியுள்ளார். பொதுமக்கள் கூடும் இடத் திற்கு காக்கி கால்சட்டையுடன் சாதாரண சட்டை அணிந்து வந்த தால் மூன்று நிமிடங்கள் மட்டும் காவலர்கள் முட்டிபோட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணைக்குப் பிறகு அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக் கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முறையான சீருடை அணியாததால் பொதுமக்கள் கூடும் இடத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் நால்வருக்கு முட்டிபோடும் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு