சுடச் சுடச் செய்திகள்

புழக்கத்துக்கு வரவிருக்கும் 200 ரூபாய் நோட்டுகள்

புதுடெல்லி: ரூபாய் நோட்டு மீட்பு விவகாரத்துக்குப் பிறகு பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய ரூ. 500, ரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன. அதேபோல, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும், சில மாற்றங்களுடன் புதிய வடிவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஒரு ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. இதுகுறித்த ஆய்வை ரிசர்வ் வங்கி மத்தியப் பிரதேசத்தில் நடத்தியது. இந்நிலையில் கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon