சுடச் சுடச் செய்திகள்

கடவுளிடம் மனு அளித்து நெடுவாசல் விவசாயிகள் போராட்டம்

புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் பகுதி மக்கள் கடவுளிடம் மனு அளிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றி யுள்ள கிராமப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், இத்திட்டத்துக்குத் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்களின் போக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் ஆதரவும் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில், நெடுவாசலில் நடந்து வரும் போராட்டம் நூறாவது நாளை எட்டியது. இதைய டுத்து அங்குள்ள விவசாயிகளும் பொதுமக்களும் நேற்று முன்தினம் கடவுளிடம் மனு கொடுப்பது போன்று சித்திரித்து போராட்டம் நடத்தினர். போராட்டக் களம் அருகே கோவிலுக்குச் சென்று அங்குள்ள சாமி சிலைகளுக்கு முன் தங்கள் மனுக்களை வைத்தனர். “மத்திய மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர் என பல்வேறு மட்டங்களில் மனு கொடுத்தும் இதுவரை எந்தப் பலனும் இல்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதிலேயே அரசுகள் குறியாக உள்ளன. எனவேதான் கடவுளிடம் மனு கொடுக்கத் தீர்மானித்தோம்,” என்கிறார்கள் விவசாயிகள்.

தமிழக இயற்கை வளத்தை அழிக்கும் வேலை நடந்துகொண் டிருப்பதாகக் குறிப்பிட்ட போராட் டக் குழுவினர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடும் வரையில் தங்களது போராட்டம் நீடிக்கும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளனர். “இவ்வாறு நூறு நாட்களுக்கு விவசாயிகளை முடக்கி வைப்பது தான் அரசாங்கத்துக்குப் பெரு மையா?” எனவும் போராட்டக் குழுவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். நூறு நாட்களைக் கடந்தும் நெடுவாசல் பகுதியில் விவசாயி கள், பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon