ஒரே குளத்தில் இருந்து ஐந்து சிலைகள் கண்டெடுப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள திருமூலஸ்தானம் கிராமத்தில், கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இதன் எதிரே உள்ள குளத்தில் இருந்தே 5 சிலைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக இக்குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி இப்பணி நடந்தபோது, நடராஜர், பெருமாள் சிலைகளும், இரண்டு அம்மன் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்ப டுத்தியது. நான்கு சிலைகளும் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக் கப்பட்டன. இந்நிலையில் புதன்கிழமை யன்று அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனிப்பட்ட தேவைக்காக குளத்தில் இருந்து மண் எடுத் துள்ளார். அப்போது அவர் கைக ளிலும் ஒரு சிலை தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பார்த்தபோது, அது ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிவன் சிலை என்பது தெரிய வந்தது. அடி பீடத்துடன் கூடிய அச் சிலை ஓரடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. இச்சிலையும் தாலுகா அலுவலகத் தில் ஒப்படைக்கப்பட்டது.