ஈரான்: ஐஎஸ் தலைவன் மரணம்

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபுபக்கர் அல் பாக்தாதி (படம்) கொல்லப்பட்டு விட்டதாக ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கமேனியின் பிரதிநிதி உறுதியாகத் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதி பாக்தாதி நிச்சயமாக மாண்டுவிட்டான்,” என்று குத்ஸ் படையின் பிரதிநிதியான சமய போதகர் அலி ‌ஷிராஸி தெரிவித்தார் என்று ஈரான் அர சாங்க ஊடகமான ‘ஐஆர்என்ஏ’ கூறியுள்ளது. ஆனால், அவன் எப்படிக் கொல்லப்பட்டான் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

2014ஆம் ஆண்டு ஈராக்கின் மோசுல் நகரில் ஒரு பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிவிட்டதாக பாக்தாதி அறிவித்தது முதலே அவன் கொல்லப்பட்டதாக அல்லது காயம் அடைந்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

சிரியாவில் தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சென்ற மாதம் 17ஆம் தேதி ரஷ்யா கூறி இருந்தது. அதே நேரத்தில், பாக்தாதியின் மரணத்தை உறுதிப் படுத்தும் விதமாக தனக்கெதுவும் தகவல் கிடைக்கவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

16 Oct 2019

கட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2019

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு