கேரளா: ஐஎஸ்ஸில் சேர இருந்த 350 பேர் மீட்பு

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதில் இருந்து 350 கேரள இளையர்களை போலிசார் மீட்டு உள்ளனர். வடகேரளாவில் இருக்கும் சில கிராமங்களில் ஐஎஸ் அமைப்பிற்கு ஆள்சேர்க்கும் முயற்சி தீவிரமாக நடந்துவருவதாக சென்ற ஆண்டு வெளியான செய்தியால் இந்தி யாவே அதிர்ச்சியுற்றது. இதன் எதிரொலியாக, ‘ஆபரே ஷன் பிஜன்’ என்ற பெயரில் தீவிர வாதப் பிரசார எதிர்ப்பு நடவடிக் கையை கேரள போலிஸ் தொடங்கியது.

காசர்கோடு மாவட்டத்தின் சில பகுதிகளை மட்டும் குறிவைத்துத் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் மாநிலத்தின் மற்ற பகுதி களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. வேறு சில அமைப்புகளின் துணை யுடன் சமூக ஊடகப் பக்கங்களை அணுக்கமாகக் கண்காணித்து, பயங்கரவாதிகளின் பிரசார வலை யில் எளிதில் சிக்க வாய்ப்புள்ள கேரள இளையர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப் பட்டது. இந்தத் தேடுதல் வேட்டை யின் முடிவில் 350 பேர் அடை யாளம் காணப்பட்டனர்.

பத்தனம்திட்டா தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் ஐஎஸ் அமைப்பிற்கு ஆள்சேர்ப்பவர்கள் கால் பதித்திருப்பது தெரியவந்தது. “அதிகபட்சமாக, கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 118 இளை யர்கள் பயங்கரவாதிகளின் வலை யில் சிக்கும் அபாயம் இருந்தது. அடுத்த நிலைகளில் மலப்புரம் (89), காசர்கோடு (66) மாவட்டங்கள் வந்தன,” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.