சுடச் சுடச் செய்திகள்

ஆண்டுக்கு 18,000 வீரர்களுக்கு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

அண்மைக்காலமாக அண்டை நாடுகளில் அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் அரங் கேறி வரும் நிலையில் அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக சிங்கப்பூர் ஆயுதப் படைகள் தனது நில, கடல், ஆகாயவழி நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்யவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் முழு நேர தேசிய சேவையாளர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 18,000 படைவீரர் களுக்கு ‘தீவு தற்காப்புப் பயிற்சி நிலையத்’தில் பயிற்சி அளிக்கப் படும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்து உள்ளார். இந்தப் பயிற்சி நிலையம் இம்மாத இறுதியில் திறக்கப்பட இருக்கிறது.

சூழல் அடிப்படையிலான பாவனைப் பயிற்சி, உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையாக துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி, சிங்கப்பூர் ஆயுதப் படையினரின் தேடுதல், கைது நடவடிக்கைகள் உள்ளிட்டவை அந்தப் பயிற்சியில் அடங்கும். தேவை ஏற்படின், தேர்ந்தெடுக் கப்பட்ட தேசிய சேவைப் பிரிவுகள் முகாம் பயிற்சியின்போது உள் நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை களில் பணியமர்த்தப்படுவர். சிங்கப்பூர் போலிஸ் படையுடன் இணைந்து கூட்டுத் தடுப்புச் சுற்றுக்காவல் பணியிலும் கட லோரக் கண்காணிப்பு நடவடிக் கைகளிலும் அவர்கள் ஈடுபடுத் தப்படுவர். எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடத் தயாராக இருக்கும் வகையில் தங்களது முகாம் பயிற்சியின் போது தேசிய சேவைப் பிரிவு களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon