சுடச் சுடச் செய்திகள்

மோடியின் எச்சரிக்கையை மீறி மேலும் ஒருவர் அடித்துக் கொலை

பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு மனிதர்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்து சில மணி நேரம்கூட ஆகாத நிலையில் அந்த எச்சரிக் கையை மீறி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ராம்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஸார்தாண்ட் பகுதி வழி யாகச் சென்ற மேற்கு வங்கப் பதிவு எண் கொண்ட ஒரு வேனை முப்பது பேர் அடங்கிய கும்பல் வழிமறித்த தாக போலிஸ் கண்காணிப்பாளர் கிஷோர் கௌஷல் தெரிவித்தார்.

ஹஸாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது அலிமுதீன், 45, என்பவர் அந்த வாகனத்தை ஓட்டி வந்தார். அவரை வாகனத்தில் இருந்து வெளி யில் இழுத்துப்போட்ட அக்கும்பல், அவரைச் சரமாரியாக அடித்து உதைத் தது. தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார். அலிமுதீனின் வாகனத்தையும் அந்தக் கும்பல் தீக்கிரையாக்கியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தும் விரைந்து சென்ற போலிசார், அலிமுதீனை மீட்டு சிகிச்சைக்காக ருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார் என்று கூறி மருத்துவர்கள் கைவிரித்துவிட்டதாக போலிஸ் அதி காரி ஒருவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி நூறு பேர் அடங்கிய கும்பலால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்தது. படம்: இந்தியத் தகவல் சாதனம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon