சுடச் சுடச் செய்திகள்

ஆப்கானிலிருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேறுவர்

வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் படிப்படியாக அங்கிருந்து மீட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் கூறியுள்ளார். பிரசல்ஸ் நகரில் நேட்டோ நாடுகளின் தற்காப்பு அமைச்சர் களை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் திரு மேத் திஸ் இவ்வாறு கூறினார். ஆப்கானில் 2011ஆம் ஆண்டு அமெரிக்க வீரர்கள் 130,000 பேர் இருந்தனர். ஆனால் 2014ஆம் ஆண்டு ஆப்கான் படையினர் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் நேட்டோ தலைமையிலான வெளிநாட்டுப் படை வீரர்கள் பலர் வெளியேறி னர். ஆப்கான் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தற்போது அங்கு 13,500 நேட்டோ வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon