சுடச் சுடச் செய்திகள்

6 நாடுகளுக்கான பயணத் தடை நடப்புக்கு வருகிறது

வா‌ஷிங்டன்: ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அகதிகளும் அமெரிக் காவுக்குள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்யும் நடவடிக்கை நடப்புக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த சர்ச்சைக்குரிய அந்தப் பயணத் தடையை அமெரிக்க உச்ச நீதி மன்றம் திங்கட்கிழமை உறுதிப்படுத்தி யதைத் தொடர்ந்து அத்தடை அமலுக்கு வந்துள்ளது. இதனால் அந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் அகதிகளும் தற்போது அமெரிக்காவுக் குள் நுழைய கடுமையான விதிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தத் தடையின் கீழ், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடு களில் இருந்து வரும் பயணிகள், அமெரிக்காவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக ரீதியாக தொடர்புகள் இல்லாமல் இருந்தால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம். புதிய விதிகளின்படி, அடுத்த 90 நாட்களுக்கு, நெருங்கிய உறவினர்கள் அமெரிக்காவில் இருந்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியும்.

அமெரிக்காவில் பெற்றோர், மனைவி, பிள்ளைகள், மகன் அல்லது மருமகள், அல்லது உடன்பிறப்பு ஆகியோரில் ஒருவர் இருந்தால் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி உண்டு. தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, மருமகன்கள், மாமியார், உறவினர் குடும்பம் மற்றும் பேரப் பிள்ளைகள் போன்றவர்கள் இருந்தால் அனுமதி கிடையாது. புதிய விதிகளின் கீழ், அமெரிக்காவுடன் வர்த்தக மற்றும் கல்வி உறவுகள் கொண்டவர்களுக்கு விதி விலக்கு தரப்படுகிறது. கடைசி நிமிடத்தில் டிரம்ப் நிர்வாகம் செய்த திருத்தங்களைத் தொடர்ந்து அந்த பயணத் தடையை உச்ச நீதிமன்றம் இந்த வாரத் தொடக் கத்தில் உறுதிப்படுத்தியது. இருப்பினும் உச்சநீதிமன்றம் அக்டோபரில் இந்த பயணத் தடை பற்றிய இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்மையில் அமெரிக்காவில் குடியேறிய பலர் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon