மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.2 விழுக்காடு குறையவுள்ளது

அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் கிலோவாட் மணி ஒன்றுக்கு சராசரியாக 0.67 காசு இறங்கவுள்ளது என்று எஸ்பி குழுமம் நேற்று அறிவித்தது. இன்றிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை கடந்த காலாண்டுடன் ஒப்புநோக்க மின்சாரக் கட்டணம் சராசரி யாக 3.2 விழுக்காடு குறையவுள்ளது. எரிவாயுக் கட்டணம் முந்தைய காலாண்டுடன் ஒப்புநோக்க 7.5 விழுக்காடு குறைந்ததே மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதற்குக் காரணம். புதிய கட்டண மாற்றத்தினால் நன்கறை வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் மாத மின்சாரக் கட்டணம் கிட்டத்தட்ட $2.55 வரை குறையும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது