வரலெட்சுமியைப் புகழும் விஜய் சேதுபதி

நடிகை வரலெட்சுமி தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்த நடிகை என்று பாராட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. புஸ்கார் - காயத்ரி இயக்கும் படம் ‘விக்ரம் = வேதா’. இதில் நடிகர் விஜய் சேதுபதி, மாதவன், கதிர், வரலெட்சுமி எனப் பலர் நடிக்கின்றனர். ‘என்கவுன்டர்’ செய்யும் காவல்துறை அதிகாரிக்கும் ஒரு தாதாவுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை என நடிகர் விஜய் சேதுபதி கூறினார். இதுகுறித்து அவர் பேசும் போது, “மூத்த நடிகரான மாதவனுடன் நடிப்பதில் கொஞ்சம் தயக்கம், பயம் எல்லாம் இருந்தது. ஆனால் மாதவன் மிக இயல்பான மனிதராக இருந்ததால் எளிதாக நடிக்க முடிந்தது,” எனக் கூறினார்.

வரலெட்சுமி குறித்துப் பேசும்போது, “அவர் வேகமாக கிடுகிடு என்று பேசுகிறார். பேசியதைப் போட்டுப் பார்த்துதான் பதில் பேச வேண்டி இருக்கிறது. மிகவும் சுறுசுறுப்பானவர்; தைரியசாலி; தன்னம்பிக்கை உள்ள பெண்,” என்று புகழ்ந்தார் விஜய் சேதுபதி. மாதவன் இப்படத்தைப் பற்றி பேசும்போது, “விஜய் சேதுபதி நான் நடித்தவர்களிலேயே மிகவும் புத்திசாலியான நடிகர். இந்தப் படம் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘துணிந்து செய்’ படத்தில் ரத்தன் மவுலி, நயனா. படம்: ஊடகம்

09 Dec 2019

துணிந்து செய்

“கவர்ச்சி காட்டுவது குற்றச்செயல் அல்ல. ஆனால் அந்தக் கவர்ச்சியை யார் காட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் இந்த விஷயம் மாறுபடும்.  படம்: ஊடகம்

08 Dec 2019

‘கவர்ச்சியாக நடிப்பது குற்றச்செயல் அல்ல’