‘நல்ல மனைவியாக இருப்பேன்: அமலாபால்

“விஐபி 2 தனுஷ் சாரின் நம்பிக்கையால் தான் உருவானது. அந்த நம்பிக்கையால்தால் நான் இங்கு வந்து நிற்கிறேன். ‘விஐபி 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி ‘டி’ சார். நான் உங்களை தொந் தரவு செய்யாமல் நல்ல மனைவியாக இருப்பேன், என்னை நம்புங்கள்," என்றார் அமலாபால். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து இருந்தபோது, இது படத்தில் வரும் வசனம்தான் என்று இறுதியாகக் கூறி முடித்தார். இந்தப் படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவைப் பார்த்து, “நான் பணியாற்றிய இயக்குநர்களில் சவுந்தர்யா மேடம் மிகவும் சிறந்தவர். ‘விஐபி 2’ படத்தை மிகவும் அழகாக எடுத்து இருக்கிறார். சவுந்தர்யா மேடத்திற்கும் நன்றி,” என்றார். பின்னர் கஜோலைப் பார்த்து, “மேடம் உங்கள் படங்களைப் பார்த்து வளர்ந்தேன். அப்படி இருக்கும்போது உங்களுடன் சேர்ந்து நடித்தது மிகப் பெரிய கௌரவமாகக் கருகிறேன்,” என்றார் நடிகை அமலாபால்.

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் படங்களில் மும்முரமாக நடித்துக்கொண்டு இருக்கிறார். மலையாளம், தமிழ் என கைநிறைய படங்கள் வைத்துக்கொண்டு ஓடி ஓடி நடிக்கிறார். படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது எல்லாம் எங்காவது சுற்றுலா சென்றுவிட்டு வருகிறார். தனியாக பயணம் செய்வது புது நம்பிக்கை அளிப்பதாக கூறுகிறார். அமலாவுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் உள்ளதாம். திருமணம் நடக்கும்போது அவரே சொல்வாராம். தற்போதைக்கு அவர் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம். திருமணத்திற்கு இன்னும் நேரம் கனியவில்லை என்கிறார் அமலாபால்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘வீராபுரம் 220’ படத்தில் இடம்பெறும் காட்சியில் மகேஷ், மேக்னா. படம்: டுவிட்டர்

21 Sep 2019

மணல் கொள்ளையைச் சாடும் ‘வீராபுரம்’

‘உலகக் கோப்பையை திருடும் கூட்டம்’ படத்தில் சந்திரன், சாட்னா.

21 Sep 2019

உலகக் கோப்பையைத் திருடுபவர்கள் கதை

படம்: ஊடகம்

21 Sep 2019

‘நாடோடிகள்-2’