திருநாவுக்கரசர்-தினகரன் சந்திப்பு மர்மம்; விசாரணை

சென்னை: அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த திருநாவுக் கரசரின் முகத்தை யாரும் மறக்க முடியாது. அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதை அவருடைய முகத்தைப் பார்த்து பழகியவர்களுக்குத் தெரியும். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசர் இன்னமும் பழைய நினைவுகளை மறக்காமல் அதிமுகவின் வளர்ச் சிக்கே பாடுபட்டு வருகிறார். திருநாவுக்கரசர் தமிழக காங் கிரசின் தலைவரா என்ற சந்தேகமும் பலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலை வராக இருந்து ஏன் அதிமுகவைப் பற்றியே பேசி வருகிறார் என்பதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலருக்குப் புரியவில்லை. இந்த நிலையில் திருநாவுக் கரசரின் மகள் திருமண நிச்சய தார்த்த விழாவில் தினகரன் பங் கேற்றது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கூட் டணியில் உள்ள திமுகவுக்கு இந்தச் சந்திப்பு குழப்பத்தை ஏற் படுத்தியுள்ளது. இதற்கிடையே திருநாவுக் கரசர்-தினகரன் பேசியது குறித்தும் விசாரிக்க காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சின்னா ரெட்டி இன்று சென்னை வரு கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஒரே வாரத்தில் முடிக்கப்பட வேண்டும்,” என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். படம்: ஊடகம்

10 Dec 2019

பாலியல் குற்றங்களுக்கு மின்னல்வேக தீர்வு