பிரதமர் லீ - அதிபர் டிரம்ப் சந்திப்பு

பிரதமர் லீ சியன் லூங் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை நேற்று ஜி20 தலைவர்களின் உச்ச நிலை மாநாட்டுக்கு இடையே சந்தித்தார். இருவரும் கைகுலுக்கிக் கொண்ட பிறகு, “சிங்கப்பூரும் நாங்களும் நெருக்கமான உறவைக் கொண்டவர்கள். நாம் பல வழிகளில் ஒன் றிணைந்து சில அற்புத மானவற்றைச் செய்ய இருக் கிறோம்,” என்று அதிபர் டிரம்ப் கூறினார். இப்போது மிகப் பெரிய நட்புறவைக் கொண் டுள்ளோம் என்று கூறிய திரு டிரம்ப், நட்புறவு மேலும் வலு வடையும் என்றும் சொன்னார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் லீ, “நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

தங்களது நிர்வாகத்தின்கீழ் இன்னும் அதிக அளவில் செய்ய நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று கூறினார். அதன் பிறகு இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. சென்ற ஏப்ரல் மாதத்தில் பிரதமர் லீயை வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத் திருந்தார். ஜி20 மாநாட்டில் அனைத் துலகப் பொருளியல் வளர்ச்சி, நிதி மற்றும் வர்த்தகம், மின்னியல்மயமாக்கல், பருவ நிலை மாற்றங்கள், பொதுச் சுகாதாரம் ஆகிய அம்சங்கள் குறித்து தலைவர்கள் விவா தித்தனர். ஜெர்மனியில் வசிக் கும் சிங்கப்பூரர்களையும் பிரதமர் சந்திப்பார் என்று என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப் பிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

9 கூண்டுகளில் அடைக்கப்பட்டு படகு மூலம் கடத்தப்பட்டபோது நாய்க்குட்டிகள் குரைக்கும் சத்தம் காட்டிக்கொடுத்தது. படம்: ஏவிஏ

20 Jun 2019

ஜோகூரிலிருந்து கடல் வழியாக 23 நாய்க் குட்டிகளை கடத்திவர முயன்றவருக்கு சிறை