சுடச் சுடச் செய்திகள்

வாழ்வில் முக்கிய இலக்குகளாக திருமணம், பிள்ளைப்பேறு

அதிக எண்ணிக்கையிலான இளையர் களுக்குத் திருமணம் செய்துகொள் ளும் எண்ணம் இல்லை எனவும் சிங்கப்பூரில் இருக்கும் ஒற்றையர் ‘டேட்டிங்’ எனப்படும் இணையுடன் சேர்ந்து பழகுவதில் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் அரசாங்கம் மேற்கொண்ட அண்மைய ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

இருபத்தொன்று முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 3,000 ஒற்றையர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 83 விழுக்காட்டினர் திருமணம் செய்துகொள்ளும் விருப் பம் இருப்பதாகத் தெரிவித்தனர். 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட இத்தகைய ஆய்வில் 86 விழுக்காட்டினர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருப்பதாகக் கூறியிருந்தனர்.

அண்மைய ஆய்வுப்படி, 59 விழுக் காட்டினர் திருமணம் செய்துகொள் ளும் நோக்கத்தோடு தீவிரமாக இணையுடன் பழகவில்லை எனவும் 41 விழுக்காட்டினர் மிகுந்த விருப் பத்துடன் பழகியதே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இணையம் வழியாக துணையச் சந்திக்கும் போக்கு அதிகரித்து வரு வதாகப் பலர் ஒப்புக்கொண்டதோடு பலர் அதன் வழியாக தங்களது இணையுடன் அறிமுகம் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மக்கள்தொகை, திறன் மேம்பாட்டுப் பிரிவு ‘திருமணம் மற்றும் பிள் ளைப்பேறு’ தொடர்பான கருத்தாய்வை மேற்கொள்கிறது. அதன் அண்மைய கருத்தாய்வில் இருந்து இந்தத் தகவல்கள் அறியப்பட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon