யுனைடெட்டில் லுகாகு

மான்செஸ்டர்: பெல்ஜிய காற்பந்து ஆட்டக்காரரான 24 வயது ரொமேலு லுகாகு (படம்) எவர்ட்டன் காற்பந்துக் குழுவில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு மாறுவது உறுதியாகி விட்டது. லுகாகுவின் குழு மாற்றம் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக யுனைடெட் நேற்று தெரிவித்தது. இதற்காக, எவர்ட்டன் குழுவிற்கு 75 மில்லியன் பவுண்டு (S$133.6 மி.) தொகையைத் தர யுனைடெட் ஒப்புக் கொண்டிருப்பதாக 'பிபிசி' செய்தி கூறு கிறது. இதையடுத்து, லுகாகு விரைவில் யுனை டெட்டின் மருத்துவச் சோதனையில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக, லுகாகுவை மீண்டும் ஒப்பந்தம் செய்ய அவர் முன்னர் பிரதிநிதித்த செல்சி குழுவும் முயன்றதாகச் செய்திகள் வெளியாகின. யுனை டெட்டைப் போல அக்குழுவும் 75 மி. பவுண்டு தொகையைத் தரத் தயாராக இருந்ததாகக் கூறப் பட்டது.

2014 ஜூலையில் 24 மி. பவுண்டு விலைக்கு செல்சியில் இருந்து எவர்ட்டன் குழுவிற்கு இடம் மாறியபோது செல்சியின் நிர்வாகியாக இருந்தவர் ஜோசே மொரின்யோ. அவர்தான் யுனைடெட்டின் இப்போதைய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. 2016=-17 இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லுகாகு 25 கோல்களை அடித்தார். அவரது ஆட்டத்திறன் நாளுக்கு நாள் மெருகேறி வருவதைக் கண்ட யுனைடெட், கடந்த சில மாதங்களாகவே அவரை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. பருவத்திற்கு முந்திய பயிற்சிப் பயணமாக யுனைடெட் குழு இன்று அமெரிக்கா புறப்படுகிறது.

அதற்கு முன்பாக லுகாகுவை ஒப்பந்தம் செய்துவிட வேண்டும் என்பதில் யுனைடெட் முனைப்புடன் இருந்தது. யுனைடெட், செல்சி போன்ற முன்னணிக் குழுக்கள் லுகாகுவை ஒப்பந்தம் செய்யத் துடித்ததைக் கண்ட எவர்ட்டன், அவரைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டது. அதன்படி, பெரிய தொகையை அவருக்கு ஊதியமாகத் தர எவர்ட்டன் தயாராக இருந்தபோதும் லுகாகு மசியவில்லை. "இதே நிலையில் தொடர்ந்திருக்க நான் விரும்பவில்லை. என்னை மேலும் மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதை நான் எங்கே செய்யவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்," என்று அப்போது அவர் கூறியிருந்தார். இபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தால் மட்டுமே ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் எவர்ட்டனால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. ஆகையால், எவர்ட்டனில் இருந்து வெளியேறி னால் மட்டுமே சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட வேண்டும் என்ற தனது ஆசை பூர்த்தியாகும் என்பதை உணர்ந்துகொண்ட லுகாகு, அக்குழுவை விட்டு விலகுவதில் உறுதியாக இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!