வீனஸ் வில்லியம்ஸ் அரிய சாதனை

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு முன்னேறிய ஆக வயதான வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஐந்து முறை அப்பட்டத்தை வென்றிருக்கும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ். 37 வயது நிரம்பிய அவர் மூன்றாம் சுற்றில் 19 வயது ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகாவை 7=6, 6=4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். நாளை நடக்கவிருக்கும் காலிறுதியில் குரோவே‌ஷியாவின் அனா கோஞ்சுவை அவர் எதிர்கொள்கிறார். ஆண்டி மரே, ரஃபாயல் நடால் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் விக்டோரியா அசரென்கா பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் நான்காம் சுற்றுக்கு முன்னேறினர்.