வெள்ளித்திரைக்கு வந்த சின்னத்திரை நாயகியின் ஆசை

சின்னத்திரை தொடர்களில் நாயகியாக நடிக்கும் ரஞ்சனா சுரேஷ், குதிரையைவிட வேகமாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். சன் தொலைக்காட்சியில் ‘குலதெய்வம்’, ‘சுமங்கலி’ ஆகிய தொடர்களில் நடித்துவரும் ரஞ்சனா சுரேஷ், வெள்ளித்திரை யிலும் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத் திரை’, ‘கீ’, ‘பில்லா பாண்டி’, சமுத்திரகனி நடிக்கும் படம், பொன்ராம் இயக்கும் படம் என்று டைரியை நிரப்பி வைத்திருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடிக்க வரும்போது குதிரை மாதிரி ஓடி நமக்குன்னு ஓரிடத்தைப் பிடிக்கணும்னு வேகம் இருந்தது. “இப்போ, நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிய ஆரம்பித்ததும் குதிரையைவிட இன்னும் வேகமாக ஓடணும்னு தோணுது. “சினிமா, தொடர் இரண்டையும் அளவோடுதான் ஏற்று நடித்து வருகிறேன். தொடர்களை ஒப்புக் கொள்ளாமல், சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தலாம். “ஆனால், எனக்குச் சின்னத் திரை தொடர்கள் என்பது பள்ளிக் கூடம் போற மாதிரி. அங்கு நடிப்பில் பெறுகிற பயிற்சியைச் சினிமாவில் வெளிப்படுத்த முடிகி றது. “அண்மையில் மிஷ்கின் சாரோட ‘துப்பறிவாளன்’ படத் தின் ஒரு காட்சியில் நடித்த போது ரொம்பவே பாராட்டினார். தொடர்களில் பெற்ற பயிற்சி யோடு அதை அணுகியதால் தான் என்னால் எளிதாகச் செய்ய முடிந்தது. எனவே, என்னைப் பொறுத்தவரை சினிமா, தொடர் இரண்டுமே முக்கியம்தான்,” என்று ரஞ்சனா கூறினார்.