நில மேம்பாட்டாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மணல் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி தமிழக நில மேம்பாட்டாளர்கள் சென்னையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகப் பல்வேறு கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். படம்: சதீஷ்