வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்: சென்னை மாநகர மக்கள் கடும் அவதி

சென்னை: தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருவ தாகக் கூறப்படும் நிலையில், சென்னை மாநகரில் கடும் தண் ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் தண்ணீ ருக்காக அல்லாடுகின்றனர். சென்னை மாநகரில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தினந் தோறும் 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் பருவ மழை பொய்த்ததாலும் சென் னைக்கு தண்ணீர் தரும் ஏரிகள் முற்றிலும் வறண்டு கிடப்பதாலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு பிற மாவட்டங்க ளிலும் போதுமான மழை பெய்யா மல் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், சென்னைக்கு கைகொடுக்க அம்மாவட்டங்களால் இயலவில்லை. இதையடுத்து கோடை காலத்து தண்ணீர் தேவையைச் சமாளிக்க ஏதுவாக, சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் மூலம் 6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 22 கல்குவாரிகளில் இருந்து 3 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. தவிர கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 20 கோடி லிட்டர் தண்ணீர் கிடைத்து வருவதால் நிலைமையை ஓரளவு சமாளித்து வருகிறது தமிழக அரசு.

எனினும் சென்னையின் பெரும் பாலான பகுதிகளில் தண்ணீர் விநியோகம் அறவே இல்லை எனப் பொது மக்கள் புலம்பு கின்றனர். மாநகராட்சி குழாய்க ளில் காற்று தான் வருகிறது என் றும் மக்கள் புகார் எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் வலியுறுத்தி உள்ளனர். சென்னையில் கடந்த 1947, 1954, 1968, 1972, 1982, 1983, 2001, 2003 ஆகிய ஆண்டுகளிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon