மலேசியா: தாதியின் காரில் வெடிகுண்டு கண்டெடுப்பு

தனது காரிலிருந்து இடைவிடாமல் ‘பீப்’ ஒலி எழுந்ததால் சந்தேகப் பட்டு காரைச் சோதித்த 27 வயது மலேசியத் தாதி ஒருவர், சத்தத் திற்கு காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுதான் காரணம் என் பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கிள்ளான், கப்பாரைச் சேர்ந்த அந்தத் தாதி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பணி முடிந்து வீடு திரும்பியபோது தமது காரில் இருந்து ‘பீப்’ ஒலி எழுந்ததைக் கேட்க நேரிட்டதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைமைத் துணை ஆணையர் ஃபத்ஸில் அகமட் கூறினார். தொடர்ந்து அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததால் பயந்து போய், எங்கிருந்து அது வருகிறது என்பதைக் கண்டறிவதற்காக தாமான் டமாயில் உள்ள தமது உறவினரின் வீட்டுக்கு காரைச் செலுத்தியதாக அந்தத் தாதி சொன்னார் என்று திரு அகமட் தெரிவித்தார்.

காரைச் சோதித்தபோது வெடி குண்டு போன்ற ஏதோ ஒரு பொருள் காரின் பின்பக்க ‘பம்ப்பரில்’ இணைக்கப்பட்டிருந்த தைக் கண்ட அவரது உறவினர், உடனடியாக அதைக் காரிலிருந்து பாதுகாப்பாக அகற்றினார். பின்னர் அவர்கள் அது பற்றி போலிசுக்கு தகவல் தெரிவிக்க, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவி னர் அங்கு விரைந்து சென்றனர். “அந்தப் பொருள் அதிநவீன வெடிகுண்டு என்பதை எங்களது சோதனை உறுதிப்படுத்தியது. சிறிய தண்ணீர் போத்தல் அளவில் இருந்த அதில் வெடிகுண்டுடன் விசை ஒன்றும் இணைக்கப் பட்டிருந்தது,” என்று திரு அகமட் சொன்னார். இருந்தபோதும், அவ்விடத்தில் இருந்து அதை அப்புறப்படுத்திய வெடிகுண்டு செயலிழப்புப் படை யினர், அதிகாலை 2.30 மணிக்கு அதை வெற்றிகரமாகச் செயல் இழக்கச் செய்தனர் என்று திரு அகமட் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon