‘அணுவாயுதப் போர் அபாயம்’

அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டுப் போர் ஒத்திகையில் ஈடுபட்டது கொரியத் தீபகற்பத் தில் அணுவாயுதப் போருக்கு வித்திடும் வகையில் அமைந்து உள்ளதாக வடகொரியா சாடி இருக்கிறது. கடந்த வாரம் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா முதன்முறையாகச் சோதித்துப் பார்த்ததையடுத்து கொரியத் தீபகற்பத்தில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், வடகொரியா வுக்குத் தங்களது வலிமையைக் காட்டும் விதத்தில் அமெரிக்கா வும் தென்கொரியாவும் சேர்ந்து நேற்று முன்தினம் போர்ப் பயிற்சி யில் ஈடுபட்டன. அணுவாயுதம் வைத்திருக்கும் வடகொரியா, அலாஸ்கா வரையில் சென்று தாக்கும் வல்லமை யுடன் கூடிய கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையையும் சோதித்துப் பார்த்தது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்ப தாக அமைந்தது.

இதற்குப் பதிலடி தரும் வித மாக, ‘எதிரி’ நாட்டின் ஏவு கணைகளையும் தரையிலுள்ள தளபத்திய நிலைகளையும் அழிக் கும் வகையில் அமெரிக்க, தென்கொரியப் போர் விமானங் கள் உண்மையான போர் ஒத்தி கையில் ஈடுபட்டன. இந்த நிலையில், இந்தக் கூட்டுப் போர்ப் பயிற்சியை வட கொரியா கடுமையாகக் கண்டித் துள்ளது. “வெடிமருந்து நிரம்பிய கொள்கலன் மீது நெருப்பைக் கொண்டு விளையாடாதீர்!” என்ற தலைப்பில் தனக்குச் சொந்த மான ‘ரோடோங் சின்முன்’ செய்தித்தாள் மூலம் வடகொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஆத்திரமூட்டும் வகையிலும் கொரியத் தீபகற் பத்தை அணுவாயுதப் போர் முனைக்குக் கொண்டு செல்லும் வகையிலும் இருப்பதாக வட கொரியா சாடியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்

07 Dec 2019

ஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை

சிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி

07 Dec 2019

‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

07 Dec 2019

பிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி