தெம்பனிசில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி

தெம்பனிஸ் சந்தை, உணவங்காடி மையப் பகுதியில் நேற்றுக் காலை யில் மகிழ்ச்சியாக ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டிருந்த குடியிருப் பாளர்களுக்குத் திடீரென கிளம் பிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் இடையூறாக அமைந்தது. ‘துப்பாக் கிக்காரர்கள்’ சுட்டு வீழ்த்தப்பட்டு, ‘தாக்குதலில் காயமடைந்தவர்’ களுக்கு முதலுதவி அளிக்கப்பட, மக்கள் தங்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பினர். தெம்பனிஸ் சங்காட் நெருக்கடி நிலை ஆயத்த நாளின் ஓர் அங்க மாக சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சமூகத் தொண்டூழியர்கள் இணைந்து இந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு பாவனைப் பயிற்சி அங்கு இடம்பெற்றது. இத்தகைய நெருக்கடிநிலையின் போது ஓடி, ஒளிந்துகொண்டு, பின் தகவல் கூறும்படி குடியிருப் பாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

கடந்த செப்டம்பரில் அறிமுக மான தேசிய அளவிலான ‘எஸ்ஜி செக்யூர்’ இயக்கத்தின்கீழ் இடம் பெற்ற 28வது நிகழ்வு இது. இந்த இயக்கம் அறிமுகமான தைத் தொடர்ந்து, மக்கள் கழகம், உள்துறை அமைச்சுடன் இணைந்து செயலாற்றி நெருக்கடிநிலை ஆயத்த நாட்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாற்றியமைத்தது.

தெம்பனிஸ் சங்காட் தொகுதியில் நேற்று நெருக்கடிநிலை ஆயத்த நாளை ஒட்டி பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு பாவனைப் பயிற்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழகத்தில் ஆங்காங்கே நடிகர் கமல்ஹாசனின் உருவ பொம்மையும் உருவப்படங்களும் எரிக்கப்பட்டு வருகின்றன.

17 May 2019

கோட்சே புகழ்ச்சி; தட்டிக் கேட்ட பாரதிய ஜனதா