தனுஷ்: இரண்டாம் பாகமும் மனம் கவரும்

‘வேலையில்லா பட்டதாரி’யின் இரண்டாம் பாகம் வெளியீடு காணத் தயாராகிவிட்டது. அண் மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இப்படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ். சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில் பிரபல இந்தி நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமாக அனிருத்துடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் இம்முறை அவரை ஒப்பந்தம் செய்யவில்லை. அதேபோல் தனு ‌ஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் எனக் கருதப்பட்ட வேல்முருகனும் இப்படத்தில் இல்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கான காரணத்தை விளக்கி னார் தனுஷ். “முதல் பாகத்தில் ஓர் இளைஞனுக்குத் தேவையான துடிப்பு, உறுதி வேண்டும். எனவே இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம்.

“ஆனால் இரண்டாவது பாகத் திற்குப் பொறுமையும் வாழ்க் கைக்கு உண்டான தத்துவத்தையும் உணர்ந்த ஓர் இசையமைப்பாளர் வேண்டும் என்பதால் சீன் ரோல் டனை அணுகினோம். இப்படத்தில் அவரது இசை அருமையாக வந்திருக்கிறது. “அதே போல் ஒளிப்பதிவில் இந்தப் படத்திற்கு சமீர் தாஹிர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்தோம்,” என்றார் தனுஷ். அவரது ரசிகர்களுக்கு ஓர் இனிக்கும் தகவல். வேறொன்றும் இல்லை, ‘வேலையில்லா பட்டதாரி’ யின் மூன்றாம் பாகமும் வெளி வருமாம். இதை தனுஷே அறிவித் துள்ளார். “மூன்றாம் பாகத்திலும் கஜோல் நிச்சயம் நடிப்பார். அவரது கதாபாத்திரம் படத்தின் அச்சாணியாக இருக்கிறது. அவரைத் தவிர்த்து வேறு யாரும் அதற்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ரசிக்கும்படி இருக்கும்,” என்றார் தனுஷ்.

‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் இடம்பெறும் காட்சியில் தனுஷ், கஜோல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon