சுடச் சுடச் செய்திகள்

டெக்சஸ் போட்டியில் ஸ்கூலிங் சாதனை

சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங், டெக்சஸ் நகரில் நேற்று நடந்த 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 50.96 வினாடிகளில் நீந்தி வெற்றி பெற்றார். இது சிங்கப்பூரின் இந்த ஆண்டின் நூறு மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டியின் சாதனை நேரமாகவும் உலகின் இரண்டாவது சாதனை நேரமாகவும் இருந்தது. உலகின் சாதனை நேரத்தை முறியடித்து முதலிடத்தில் இருப் பவர் அமெரிக்காவின் சாலெப் ட்ரெஸ்ஸல் (50.87 வினாடிகள்). இவர் கடந்த வாரம் நடந்த போட்டி ஒன்றில் இந்தச் சாதனை நேரத்தில் நீந்திக் கடந்தார். டெக்சஸில் நடந்த இந்தப் போட்டியில் ஜேம்ஸ் கூப்பர் 52.31 வினாடிகளில் நூறு மீட்டரைக் கடந்து இரண் டாவது நிலையிலும் பிரைஸ் போமன் என்பவர் 53.08 வினாடி சாதனை நேரத்தில் கடந்து மூன்றாவது நிலையிலும் இருந் தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஸ்கூலிங் 100 மீட்டர் எதேச்சைபாணி போட்டியில் 48.74 வினாடி நேரத்தில் வென் றார். நூறு மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்கூலிங், “உலகின் சாதனை நேரத்தை முறியடிக்க விரும்பு கிறேன். நான் இப்போது பெற்றுள்ள இந்தச் சாதனை நேரம் எனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. ஏனெனில் இது இவ்வாண்டின் இரண்டாவது சாதனை நேரமாகக் கருதப்படுகிறது. “இப்போது உலகச் சாதனை நேரத்தை முறியடித்த சாலெப்பை வேறு யாரும் தோற்கடித்து முதலிடத்தைப் பிடிக்க நான் விட்டுவிட மாட்டேன்,” என்றார். ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஜூலை 16 முதல் 29ஆம் தேதி வரை தங்கப் பதக்கத்திற்கான உலக வெற்றியாளர் போட்டி நடைபெறவுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon