ஜப்பானில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது

தோக்கியோ: ஜப்பானின் தெற்குப் பகுதியில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்திருப்பதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பானின் முக்கியமான நான்கு தீவுகளில் தெற்கு ஓரத்தில் இருக்கும் ‘ஸ்வாத்ஸ் ஆஃப் கியு‌ஷு’ எனும் தீவு கனமழை காரணமாக பெரும் சேதத்துக்குள்ளாகி இருக்கிறது. மழைப்பொழிவு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் சாலைகள், வீடுகள், பள்ளிகள் போன்றவை பலத்த சேதமடைந் துள்ளன. ஆயிரக்கணக்கானோர் தற் காலிகக் கூடாரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன் னும் ஏராளமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கன மழை, சேறு ஆகியவற்றால் அவர் களை மீட்புப் பணியாளர்கள் சென்றடைவதில் சிரமம் இருப்ப தாகவும் அதிகாரிகள் கூறினர்.

வெள்ளத்தில் சிக்கியிருப் போரை மீட்பதற்கான நடவடிக்கை களில் ஆன அனைத்தையும் முடுக்கிவிட்டிருப்பதாக நாடாளு மன்ற தலைமைச் செயலாளர் யோ‌ஷிஹைட் சுகா கூறியுள்ளார். ஃபுபூகுவோகா, ஆய்ட்டா ஆகிய பகுதிகளில் இதுவரை 18 பேர் மாண்டுபோனது உறுதிப்படுத் தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஐவர் கவலைக்கிடமான இடத்தில் இருப்பதாக திரு சுகா தெரிவித்தார். வடக்கு கியு‌ஷு பகுதியில் மழைப்பொழிவு தொடரும் எனவும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஜப்பான் வாநிலை மையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.