3 டன் யானைத் தந்தங்கள் பிடிபட்டன

ஹனோய்: பழப்பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட, சுமார் மூன்று டன் எடையுள்ள யானைத் தந்தங்களை வியட்னாமிய அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். ஹனோய் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்றில் சோதனை நடத்தியபோது பழப் பெட்டிகளுக்கு இடையே 2.7 டன் எடையுள்ள யானைத் தந்தங்கள் இருந்ததை போலிசார் கண்டு பிடித்தனர். இந்த யானைத் தந்தங்கள் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந் தவை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தாம் ஓட்டிச் சென்ற டிரக்கில் என்ன பொருள் இருந்தது என்பது பற்றி தனக்குத் தெரியாது என அந்த டிரக்கின் ஓட்டுநர் போலிசாரிடம் தெரிவித்ததாக ‘டுவோய் ட்ரெ’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

1980ஆம் ஆண்டின் இறுதியில் ஆப்பிரிக்க யானைகளின் எண் ணிக்கை சுமார் 600,000 ஆக குறைந்ததை அடுத்து 1989ஆம் ஆண்டு முதல் உலக அளவில் யானைத் தந்தங்களை வர்த்தகம் செய்வது சட்டவிரோதமாக்கப் பட்டது. தற்போதிருக்கும் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 415,000 என்று கணிக்கப்பட் டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 30,000 ஆப்பிரிக்க யானைகள் சட்ட விரோதமாக கொல்லப்படு வதாகச் சொல்லப்படுகிறது. ஒரு கிலோ எடையுள்ள யானைத் தந்தத்தின் விலை 1,100 அமெரிக்க டாலர்கள் வரை விற்கப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon