மக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் எளியோருக்குத் தேர்ச்சிகள்

எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய எளியோருக்கு அன்றாட பணிகளைத் திறம்படச் செய்ய தேவைப்படக்கூடிய தேர்ச்சிகள் போதிக்கப்படுகின்றன. வீட்டில் சிறுசிறு சரிபார்ப்பு வேலைகளைச் செய்வது, பண நிலை பற்றி தெரிந்துகொள்வது, தகவல்தொழில்நுட்பம் போன்ற அடிப்படை தேர்ச்சிகளை 700க்கும் மேற்பட்ட மக்கள் கற்றுக்கொள்ள விருக்கிறார்கள். மக்கள் கழகம் ஒரு செயல்திட் டத்தைத் தொடங்கி இருக்கிறது. அந்தத் திட்டத்தின்கீழ் மாதாமாதம் இவர்களுக்கு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. மக்கள் கழகம் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு முன்னோடி திட்டமாக The Project We Care (PWC) Enrich Lab @ RC என்ற திட்டத்தை தொடங்கியது. அந்தத் திட்டத்தில் இந்தக் கழகத்தின் 24 நிறுவன மற்றும் சமூக பங்காளிகள் அங்கம் வகிக் கிறார்கள். இவர்கள் ஆறு வசிப் போர் குழுக்களைச் சேர்ந்த குடி மக்களுக்கு அடிப்படைத் தேர்ச்சி களைப் போதிக்கிறார்கள். இயோ சூ காங், ரிவர்வேல் ஆர்க், கெபுன் பாரு வியூ, டகோட்டா, மரின் கிரசெண்ட் வில், தாமான் ஜூரோங் மண்டலம் பி ஆகியவை அந்த விசிப்போர் குழுக்கள். இந்தத் திட்டத்தை விரிவு படுத்தி 60 பங்காளிகளை இதில் உள்ளடக்கலாம் என்றும் தீவு முழுவதும் இருக்கும் 60 வசிப்போர் குழு குடியிருப்பாளர் களுக்குப் போதிக்கலாம் என்றும் மக்கள் கழகம் நம்புகிறது.

இயோ சூ காங் மண்டலம் 9 வசிப்போர் குழுவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிந்தாய் கின்டெங்கோ நிறுவனத்தின் நிர்வாகி வேலரி சிம், அங் மோ கியோவை சேர்ந்த ஒருவருக்கு ஒழுகும் தண்ணீர்க் குழாயை எப்படி சரிபடுத்தலாம் என்பதை போதிக்கிறார். லியோவ் சியோங் என்ற மின்சார ஊழியர் உடனிருந்து உதவுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!