திருமா: பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது

சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன் வலியுறுத்தி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், நீட் தேர்வை நீக்கக் கோரி சென்னையில் வருகிற 12ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்றார். “மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள் மீது நடவ டிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் கூறி உள்ளது. ஆனா லும் காவல்துறை அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கி றது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவல்துறை இவ்வாறு செயல்படுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார் திருமா வளவன்.

திமுக ஆட்சியில் இருந்த போது பஞ்சமி நிலங்களை கையகப்படுத்த தனி ஆணையம் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக அரசு அமைந்த பிறகு அந்த ஆணையம் செயல் படவில்லை எனக் குறைகூறினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பெண்களின் தன்னெ ழுச்சிப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் பேசி இருப் பதைக் கண்டிப்பதாகக் கூறி உள்ளார். பெண்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் மதித்துச் செயல் பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். “சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் பழனிசாமி, மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை என்றும் இத்தகைய போராட்டங் களைப் பெண்கள், குழந்தைகளை வைத்து நடத்துவது வாடிக்கை யாகிவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon