சிவகார்த்திகேயன் வீட்டில் பணியாற்றியவர் மர்ம மரணம்

திருச்சி: திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில் பணியாற்றி வந்தவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து திருச்சி போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் திருச்சியில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்தார். கடந்த மூன்று தினங்க ளாக இவர் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ஆறுமுகத்தின் சடலம் சிவகார்த்தி கேயன் வீட்டின் அருகே உள்ள கல்குவாரியில் கண்டெடுக்கப் பட்டது. போலிசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக கல்குவாரிக்கு வந்தார், எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து திருச்சி போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் வீட்டுப் பணியாளர் என்பதால் ஆறுமுகத் தின் மர்ம மரணம் தமிழ்த் திரை யுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon