சுடச் சுடச் செய்திகள்

வாராப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்கள் உட்பட 90 பேர் காயம்

புதுக்கோட்டை: வாராப்பூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் உட்பட 90 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 1,189 காளைகள் கலந்து கொண்டன. 250 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

காலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை வரை விறுவிறுப்பாகவும் பலத்த கரவொலிக்கு இடையிலும் நடந்தேறியது. நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வைக் காண வந்திருந்தனர். போட்டியின் போது காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். மேலும் பார்வையாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. மொத்தம் 90 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் படுகாயமடைந்த 12 பேர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியின் போது காளைகளை அடக்கியவர்க ளுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு கிடைத்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon