கேலாங்கில் 41 வயது ஆடவரின் உடல்

கேலாங்கில் உள்ள ஒரு சந்தில் நேற்று காலை 41 வயது ஆட வரின் உடல் கண்டுபிடிக்கப் பட்டது. இது குறித்து காலை 7.43 மணி அளவில் தகவல் கிடைத்து அங்கு வந்த காவல் துறையினரும் மருத்துவ உதவி யாளர்களும் ஆடவர் ஒருவர் அசைவற்றுக் கிடப்பதைக் கண் டனர். உடனடியாக ஆடவரைப் பரி சோதித்த மருத்துவ உதவியாளர் கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். ஆடவரின் தலையிலும் உடலின் மேற்பகுதியிலும் காயங் கள் இருந்ததாக நம்பப்படுகிறது. அருகில் உள்ள 24 மணி நேர காப்பிக் கடையில் இரு கும்பல்களுக்கு இடையே வாக்கு வாதம் மூண்டதாக லியான்ஹ வான்பாவ் தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்த வாக்குவாதத் தின்போது சமரசம் செய்த ஆடவர் பின்னர் இறந்துகிடந்த தாகக் கூறப்படுகிறது.