சுடச் சுடச் செய்திகள்

குடிபோதை தொடர்பான பிரச்சினைகள் குறைந்தன

மதுபான விற்பனை, பொது இடங் களில் மதுபானங்களைக் குடிப்பது தொடர்பில் கடுமையான விதி முறைகள் அமலாக்கப்பட்ட பிறகு பொது இடங்களில் நடைபெறும் ஒழுங்கீனச் சம்பவங்கள் வெகு வாகக் குறைந்துள்ளன. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்பட்டு குடிமக்களின் மகிழ்ச்சி கூடியுள்ளது என்று ஸ்ட் ரெயிட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது. 2015 ஏப்ரல் மாதத்தில் மது பானம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு முன்பு 2014ல் மது பானம் தொடர்பில் 251 ஒழுங்கீனச் சம்பவங்கள் நடைபெற்றன. இதுவே 2015ல் 97 சம்பவங் களாகவும் கடந்த ஆண்டில் 135 சம்பவங்களாகவும் குறைந்தன.

குடிபோதையில் கலவரம், அம ளியில் ஈடுபடுவது, சச்சரவுகளில் ஈடுபட்டு காயங்களை விளைவிப் பது போன்ற சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. 2015ல் பொது இடங்களில் இரவு 10.30 மணியிலிருந்து மறு நாள் காலை 7.00 மணி வரை மதுபானங்களைக் குடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதோடு மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. குடிபோதை பிரச்சினைகள் அதிகமுள்ள பகுதிகளை உள்ள டக்கிய மதுபானக் கட்டுப்பாட்டு வட்டாரங்களில் கடுமையான விதி முறைகள் அமலில் உள்ளன. உதாரணமாக சனிக்கிழமை காலை 7.00 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 7.00 மணி வரை பொது இடங்களில் குடிப் பதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மதுபானம் தொடர்பில் கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்பட்ட பிறகு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon