பரந்த கட்டமைப்புடைய இணைய பாதுகாப்பு மசோதா: மக்கள் ஆலோசனை

பாதுகாப்பு மீறல்கள் நிகழுமாயின் முக்கிய தகவல் கட்டமைப்பு உரிமையாளர்களும் அதிமுக்கிய சேவைகள் வழங்கும் இணைய பாதுகாப்பு தொடர்பான விற்பனை யாளர்களும் அதை உடனடியாகச் சம்பந்தப்பட்ட அமைப்பு களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணையப் பாதுகாப்பு மசோதை விரைவில் நிறைவேற் றப்பட்டவுடன் இணையப் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் அனைத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களின் கருத்துகளைக் கண்டறிய இந்த மசோதாவின் நகல் வடிவம் நேற்று வெளியிடப்பட்டது.

உலகளாவிய பங்காளித்துவத்தைப் பலப்படுத்துதல், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு, வங்கிச் சேவைகள், எரிசக்தி சேவைகள் போன்ற முக்கிய தகவல் கட்டமைப்பில் காணும் பாதுகாப்புக் குறைபாடுக ளைத் தீர்க்க அதிக நிதியைக் கோருதல் போன்றவை தொடர்பான உயர்மட்ட இணையப் பாதுகாப்பு உத்திகள் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப் பட்டன. புதிய சட்டத்தை வரைய இணையப் பாதுகாப்பு ஆணை யம் இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த மசோதாவில் இணையப் பாதுகாப்பு ஆணையத்தின் தலை வரை இணையப் பாதுகாப்பு ஆணையாளராகப் பெயர் குறிப் பிட்டுள்ளது. அவர் இணையம் தொடர்பான மிரட்டல்களையும் சம்பவங்களையும் விசாரித்து முக்கிய சேவைகளில் தடங்கல் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon