அமைச்சர் இங்: ஒரு குழுவாக சிங்கப்பூரர்கள் வலுவானவர்கள்

ஒருசிறு அசைவாக இருந்தாலும் பூன் லே கார்டன் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வீடுகள் இடிந்துவிடும். அந்த வீடுகள் கடின தாட்களால் செய்யப்பட்டவை. அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாகச் செயல்பட்டால் இடிந்த வீடுகளை எவ்வாறு மீண் டும் எழுப்பலாம். அவ்வாறு செயல்படவில்லை என்றால் வெளிசக்தி நம் அன்றாட வாழ்வை எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கலாம் போன்ற முக்கிய மான படிப்பினைகளை மாணவர் கள் நேற்று கற்றுக் கொண்டனர். நேற்று முதல் தொடங்கிய இவ் வாண்டின் இன நல்லிணக்க நாள் கொண்டாட்டங்களை பூன் லே கார்டன் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார் கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங். தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் இங், அவர்களிடம் சிங்கப்பூரர்களிடையே ஒற்றுமை யின் முக்கியத்துவம் பற்றி எடுத் துரைத்தார்.

“சிங்கப்பூரர்கள் ஒரு குழுவா கச் செயல்படும்போது, நமது சக்தி வலுப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு நாம் மேம்பட்ட இல்லங் களை அமைத்து கொள்ளலாம். சுற்றி அமர்ந்திருக்கும் மாண வர்கள் ஒரு பெரிய அட்டை மேடை யைத் தங்கள் மடியில் வைத்திருந் தனர். அந்த அட்டை மேடையில் கடின தாட்களால் ஆன வீடுகளை அமைக்க வேண்டும். வீடுகள் இடிந்துப்போவது போல ஒரு பாவனை நிலநடுக்கத் தையும் சூறாவளியையும் ஏற்படுத்த ஆசிரியர்கள் பலத்த காற்றை வீசச் செய்தனர்.

இடிந்துபோன வீடுகளை மீண் டும் எழுப்ப, வெவ்வேறு இனங் களையும் வெவ்வேறு நாடுகளை யும் சேர்ந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து செயலாற்றினர். இம்மாதம் 21ஆம் தேதியன்று இன நல்லிணக்க நாள். அனைத் துப் பள்ளிகளும் இந்த நாளை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடும்.

பூன் லே கார்டன் தொடக்கப் பள்ளிக்கு நேற்று வருகை புரிந்த கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் (நடுவில்) மாணவர்களுடன் அமர்ந்து இன நல்லிணக்கத்தை அவர்களுக்கு விளக்குகிறார். படம்: பெரித்தா ஹரியான்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு. படம்: நீதிமன்ற ஆவணங்கள்

15 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’